லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)
என்ன காரணமோ தெரியவில்லை பல முறை முயர்சித்தும் அந்த் லினக்ஸ் ஆனது சரியாக என் மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. சரி அந்த லினக்ஸ் வேணாம் என்று நினைத்து Windowsல் போகலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சரி இதுக்கு மேல் ரிஸ்க் வேணாம் என்று ஒரு Service Engineerஇடம் மடிக்கணினியை சரி செய்துதருமாரு கொடுத்தேன்.
அவரும் அவர் பங்கிற்கு ஒரு டிரவை Format செய்து ஒரு வழியாக சரி செய்து கொடுத்தார். நல்ல வேலை எனது முக்கிய கோப்புகள் அடங்கிய டிரைவ் தப்பித்தது. இருந்தாலும் அந்த டிரைவ்களில் உள்ளது தேவைப்படும் கோப்புகளே. அதை மீட்க ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று தேடினேன் தேடினேன்... எல்லாம் Format செய்யப்படுவதற்கு முன்னால் உள்ள் கோப்புகளை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்க வில்லை.
மிக நீண்ட தேடலுக்கு பின் கிடைத்ததுதான் Recover My Files மென்பொருள். இதில் நீங்கள் Format செய்த Driveகளில் இருத்தும் கோப்புகளை மீட்கலாம்.
Download Recover My File V3.98
இப்போது என் மடிக்கணினியில் அந்த லினக்ஸை வெற்றிகரமாக நிறுவிட்டேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
No comments:
Post a Comment