ஆண்ட்ராய்டு உடன் குரோமை சிறப்பாக இயக்க - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 12 June 2014

ஆண்ட்ராய்டு உடன் குரோமை சிறப்பாக இயக்க

இன்றைக்கு கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் ப்ராடக்டுகள் தான் ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் ஆகியவை ஆகும்.

 ஆனால், இவை இரண்டும் வெவ்வேறான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 
 
இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை இங்கு பார்க்கலாம். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன் இயக்க சாப்ட்வேர் தொகுப்பாகும்.

  இது மொபைல் போன் இயங்குவதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம், மிடில்வேர் எனப்படும் அப்ளிகேஷனைத் தொடர்பு படுத்தும் சாப்ட்வேர் மற்றும் முக்கிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்கள் அடங்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். 



ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் அப்ளிகேஷன்கள், இணையத்தில் கிடைக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயர்ந்து கொண்டே போகிறது.

 தொடக்கத்தில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, 2003ல் தொடங்கப்பட்ட Android OS Inc என்ற நிறுவனம் உருவாக்கியது. ஆனால், 2005 ஆம் ஆண்டில், கூகுள் இதனை வாங்கியது.

 தொடர்ந்து அதன் பல்வேறு பதிப்புகளை உணவுப் பொருட்களின் பெயர்களோடு, ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் வெளியிட்டது. தற்போது அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டது ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆகும். 

டேப்ளட் போன்ற சாதனங்களிலும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் 3.0 (Honeycomb), டேப்ளட் பி.சி.க்கள் இயக்கத்திற்கு மட்டும் என உருவாக்கப்பட்டதாகும். குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

 இது லினக்ஸ் அடிப்படையில் உருவானது. இணைய அப்ளிகேஷன்களுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதாகும். UBUNTU என அழைக்கப்படும் இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பதிப்பினை ஒட்டி குரோம் ஓ.எஸ். அமைக்கப்பட்டது. 

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழக்கமான அப்ளிகேஷன்கள் எதுவும் இருக்காது. இணைய அப்ளிகேஷன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, இதனை இன்ஸ்டால் செய்திடவோ அல்லது அப்டேட் செய்திடவோ தேவை இல்லை. 

இணைய அப்ளிகேஷன்களை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து, அவை சிஸ்டத்தின் இயற்கையான அப்ளிகேஷன்களாக காட்டப்படும். எளிமை, பாதுகாப்பு மற்றும் வேகம் தான், குரோம் சிஸ்டத்தின் அடிப்படை சிறப்பம்சங்களாகும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here