Youtubeல் வீடியோக்களை பிரபலமாக்குவது எப்படி ? - EDEN SOF2

EDEN SOF2

🎮 🎥 𝕋ℍ𝔼 ℂ𝕆𝕄ℙ𝕃𝔼𝕋𝔼 𝕊𝕆𝕃𝕌𝕋𝕀𝕆ℕ 📖 📺

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 8 June 2014

Youtubeல் வீடியோக்களை பிரபலமாக்குவது எப்படி ?

   



இன்று Youtube என்பது மிகப் பிரபலமான ஒன்று. இதில் எல்லா வகையான வீடியோக்களும் உள்ளன.

 இதில் யார் வேண்டும் என்றாலும் தங்கள் வீடியோக்களை அப்லோடு செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யப்படும் வீடிக்களை அதிகமான மக்களால் பார்க்கும் படி செய்யலாம் .


 அதாவது வீடியோக்களை பிரபலமாக்கலாம். இன்று Youtubeல் இல்லாத வீடியோக்களே இல்லை . மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்க்காகவே உருவக்கப்பட்டது ஆகும் .

 நீங்கள் என்ன டைப் செய்தாலும் அதற்க்கான வீடியோ அல்லது அதன் தொடர்புடைய வீடியோக்களைக் காணலாம். 

இப்பொழுது Youtube ல் வீடியோக்களை எவ்வாறு பிரபலமாக்குவது என்பதைப் பார்ப்போமா...

1. பாட்டு பாடுதல்:

                               நீங்கள் பாட்டுகளைப் பாடும்போது மற்றவர் அதைப்பற்றி கேள்விகள் எழுப்பாத வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியமாகும். எனெனில் நீங்கள் பாடினை பதிவு செய்த பிறகு அந்த பாட்டினை கேள்விக் கேட்க்கும் படி அமைந்தால் அது பிரபலமடையாது. இந்த வீடியோக்கள் ரேன்டமாகத்தான் டிஸ்ப்பிளே ஆகும். அதனால் இதனைப்பற்றிய விளம்பரம் அவசியமானதாகும்.

2.வித்தியாசமான முறையில் ஆடுதல்:

                                  இன்று இந்த முறையானது மிகவும் பிரபலமடைந்துள்ளது. அமெரிக்காவில் நம் மக்கள் இதுபோன்று வித்தியாசமான முறையில் ஆடி அதனை மிகப்பிரபலமாக்கியுள்ளனர். உங்கள் நண்பர்களைக்கொண்டு இதனை செய்யலாம். அனைவரையும் ஒரு பொது இடத்தில் சேர்த்து திடிரென ஆட விட்டு அதனை படமாக்கி Youtube ல் ஏற்றினால் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பிரபலமடையும்.

3.குழந்தை வீடியோக்கள் :
                             
                                  இன்று குழந்தை வீடியோக்கள் Youtube ல் மிகவும் பிரபலமாகி வருகின்றன. குழந்தை வீடியோக்கள் என்றால் பல்வேறான குழந்தைகளின் சிரிபினை படமாக்குவது. மற்றும் அவர்கள் செய்கின்ற சேட்டைகள் அனைத்தையும் படமாக்கி அதனை Youtube ல் சேர்த்தால் உங்கள் வீட்யோ பிரபலமடையும்.

4.மிருகங்களின் வீடியோக்கள் :

                                மக்கள் குழந்தைகளின் வீடியோக்களை அடுத்து அதிகமாக பார்க்கும் வீடியோ என்ன தெரியுமா.. மிருகங்களின் வீடியோக்கள் தான். ஏனெனில் ஒவ்வொரு மிருகமும் வித்தியசமான பல செயல்களை செய்வதால் அவைகளைப் பார்ப்பதற்க்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே மிருகங்களின் செயல்களை வீடியோ எடுத்து அதனை Youtube ல் சேர்த்தால் உங்கள் வீடியோ பிரபலமடையும்.

5.பொது இடத்தில் வித்தியாசம் :

                                       பொது இடங்களில் திடீரென வித்தியாசமான செயல்களைச் செய்து அதனை படமாக்கி பிரபலமடாயச் செய்யலாம். நீங்கள் stepup revolution என்ற படத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும். அந்த படத்தில் அப்படித்தான் பொது இடத்தில் அல்லது பிரபலமான இடத்தில் ஆடல் செய்து அதனை பிரபலமாக்குவார்கள். அவ்வாறன சில வித்தியாசமான செயல்களை செய்வதன் மூலம் வீடியோக்களை பிரபலமடைய செய்யலாம்.

6.எதுவும் தோன்றவில்லை என்றால் :

                                   உங்களுக்கு இதனைப் பற்றி எதுவும் தோன்றவில்லை என்றால் உங்கள் வீடியோக்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் . உங்கள் வீடியோக்களை காணும்படி மற்றவர்களை வர்ப்புறுத்துங்கள். இது தான் உங்கள் வீடியோக்களை பிரபலமாக்க ஒரே வழி.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். Facebook, Google+ ல் சேர் செஞ்சுடுங்க.

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here