உங்கள் Smart Phone இன் Battery மிக விரைவில் தீர்ந்து விடுகிறதா? கவலையை
விடுங்கள் சில உபாயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் Smart Phone இன்
Battery ஐ நீடித்துழைக்கச் செய்யலாம்.
இதற்கு பின்வரும் வழிமுறைகளை கடைபிடியுங்கள்.
● உங்கள் Mobile Phone இல் தரப்பட்டிருக்கும் Auto-Sync வசதியை நிறுத்தி வையுங்கள்.
● தொலைபேசிக்கான சேவை (Signal) கிடைக்காத பட்சத்தில் உங்கள் Mobile ஐ Offline இற்கு இட்டு வையுங்கள்.
● Battery இன் திறன் குறைந்து (Battery Low) காணப்படும் சந்தர்பத்தில்
Games, Application போன்றவைகளின் பாவனையை குறைத்துக் கொள்ளுங்கள்.
● உங்கள் Mobile இன் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் Application களை இனங்கண்டு அவற்றின் செயற்பாட்டை நிறுத்துங்கள்.
● 3G, Bluetooth, Wi-Fi போன்றவற்றை பயன்படுத்தாத சந்தர்பத்தில் நிறுத்தி வையுங்கள்.
● உங்கள் மொபைலுக்கு மின்னேற்றுகையில் (Charging) அதனை பாதுகாப்பதற்கென
நீங்கள் பயன்படுத்தும் Case Cover இனை நீக்கிவிட்டு மின்னேற்ற
முயற்சியுங்கள் இது உங்கள் மொபைல் அதிகம் வெப்பமாவதை தவிர்க்கும்.
● உங்கள் மொபைலை மாதத்திற்கு ஒருமுறையேனும் Switch Off செய்து விட்டு
முழுமையாக மின்னேற்றுங்கள் - இது Battery இன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.
● உங்கள் மொபைலை மின்னேற்றுவதற்காக முடியுமானவரை அதற்கென்றே தரப்பட்ட மின்னேற்றியை பயன்படுத்துங்கள்.
● உங்கள் மொபைலை அதிக வெப்பமான இடத்திலேயோ அல்லது அதிக குளிர்ச்சியான இடத்திலோ வைப்பதை தவிர்த்திடுங்கள்
● இவைகள் அனைத்தினையும் இனிதே செய்துமுடித்திட Battery Doctor இனை பயன்படுத்துங்கள்
Battery Doctor இனை Android மற்றும் iOS சாதனங்களுக்கு இலவசமாக தரவிறக்கிக்
கொள்ளலாம் இதனை உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள
இணைப்பில் செல்க.
No comments:
Post a Comment