சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு
வகையான மென்பொருள் உள்ளன. அவற்றை SIM Card Data Recovery மென்பொருட்கள்
என்போம். இப்பதிவில் நான் அறிந்துகொண்ட சிம் டேட்டா ரெகவர் மென்பொருட்களைப்
பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமல், சிம்கார்டிலும் தகவல்களை
சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில்
சேமிக்கக்கூடிய தகவல்கள்:
1. Call History
2. Phone Book Numbers
3. SMS
இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும்.
அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து
ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு
ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத்
திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள்.
அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.
இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.
ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.
அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம்
ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட்
ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ்.
ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட்
போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.
ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய
நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும்
அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து,
அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில்
அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.
முக்கிய குறிப்பு: மென்பொருள்கள்பற்றிய
நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை நன்றாக படித்தறிந்த
பிறகு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.
எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் (mydeene@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.
Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் லைக் செய்திடுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்
SHARE THIS POST ON:
No comments:
Post a Comment